கொரோனா டெஸ்ட் பண்ண வந்த மருத்துவர்கள் முன் இருமி இருமியே ஊரைவிட்டு துரத்திய மக்கள்..! அலறியடித்து ஓடிய மருத்துவர்கள்..! பரபரப்பு சம்பவம்..! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா Covid-19

கொரோனா டெஸ்ட் பண்ண வந்த மருத்துவர்கள் முன் இருமி இருமியே ஊரைவிட்டு துரத்திய மக்கள்..! அலறியடித்து ஓடிய மருத்துவர்கள்..! பரபரப்பு சம்பவம்..!

கொரோனா பரிசோதனை செய்ய வந்த மருத்துவ குழுவை, கிராமத்தினர் சிலர் மருத்துவ குழுவினரின் முகத்தின் முன்பு இருமி அவர்களை ஊரைவிட்டு விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக திருவனந்தபுரத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால் அந்த பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருவனந்தபுரம் மாவட்டம், பூந்துரா என்னும் கிராமத்தில் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த பகுதியில் உள்ள மற்றவர்களும் கொரோனா பாதிப்பு பிறவியுள்ளதா என சோதனை செய்ய, மருத்துவ குழு ஒன்று அந்த கிராமத்திற்கு காரில் சென்றுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 70கும் மேற்பட்டோர் காரை வழிமறித்து, இங்கு யாருக்கும் கொரோனா இல்லை என்றும் அப்படி எங்களுக்கு கொரோனா இருந்தால் உங்களுக்கும் வரட்டும் என கூறி கார் கண்ணாடியை திருந்து உள்ளே இருந்த மருத்துவ  குழுவினர் முன்பு இருமியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவக்குழுவினர் உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதனை அடுத்து மருத்துவ குழுவினர் அனைவரும் ஒருவாரத்திற்கு தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவின் தீவிரம் புரியாமல் கிராம மக்கள் இப்படி நடந்துகொண்டது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo