த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
அரசு பேருந்து - தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து.. 9 பேர் பரிதாப பலி; முந்திச்செல்ல முயன்று நொடியில் பயங்கரம்..!
சுற்றுலா பேருந்தும் - அரசு பேருந்தும் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர்.
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரி பகுதியில் அரசு பேருந்து - சுற்றுலா பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. பாலக்காடு - திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சுற்றுலா பேருந்தில் 42 பள்ளி மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் பயணம் செய்த நிலையில், இவர்களில் 12 பேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
அரசு பேருந்தில் பயணம் 24 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்து இருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்ற போது விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.