கேரளாவில் தலைவிரித்தாடும் ஜாதிய தீண்டாமை.. உடலை அடக்கம் செய்ய விடாமல் அராஜகம்.. பதைபதைப்பு தகவல் அம்பலம்.!

கேரளாவில் தலைவிரித்தாடும் ஜாதிய தீண்டாமை.. உடலை அடக்கம் செய்ய விடாமல் அராஜகம்.. பதைபதைப்பு தகவல் அம்பலம்.!


kerala-palakkad-attappady-tribal-caste-discrimination-c

அட்டப்பாடி புதூர் பகுதியில் உயிரிழந்த தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணின் உடலை தகனம் செய்ய விடாமல் உள்ளூர் உயர்ஜாதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த பகீர் சம்பவம் தொடர்பான தகவல் 1 வருடம் கழித்து தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி புதூர் பகுதியில் ஏராளமான பழங்குடியின சக்கிலியர் சமூகத்தை சார்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். சக்கிலியர் இனத்தை சார்ந்த பெண்மணி சகுந்தலா (வயது 44). கடந்த 2020 மார்ச் 24 அன்று ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில், ஊரடங்கு அறிவிப்பு வெளியாகும் சிலமணிநேரத்திற்கு முன்னதாக சகுந்தலாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் 50 கி.மீ தொலைவில் உள்ள பெரிந்தால்மன்னா அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதி செய்யப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, சகுந்தலாவின் உடலை அடக்கம் செய்ய சொந்த ஊருக்கு உடல் கொண்டு வரப்பட்ட நிலையில், சக்கிலியர் இனத்தை சார்ந்தவர்கள் அங்குள்ள காட்டுப்பகுதியில் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் இறந்தவர்களின் உடலை புதைப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. ஆனால், ஊரடங்கு அமலாகிவிட்டதால் காட்டுப்பகுதியில் உடலை அடக்கம் செய்ய வனத்துறை அனுமதிக்கவில்லை. இதனால் அவரின் உடல் புதூருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அங்குள்ள உள்ளூர் இந்து மத உயர்ஜாதி மக்கள், சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அது தனியார் அமைப்புக்கு சொந்தமான தகனம் செய்யும் இடம் என்றும் வாக்குவாதம் செய்துள்ளனர்.

50 க்கும் மேற்பட்ட உள்ளூர் உயர்ஜாதி மக்கள் சுடுகாட்டுக்கு வந்து சகுந்தலாவின் சகோதரர் ராமனை மிரட்டிய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்திருந்த காவல் அதிகரிக்கும், வட்டாட்சியருக்கு எதுவும் பேசாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளனர். மேலும், அவரின் உடலை 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு சுடுகாட்டு எடுத்து செல்லவும் உள்ளூர் மக்கள் மிரட்டிய நிலையில், சகுந்தலாவின் உடல் 70 கிமீ தொலைவில் உள்ள மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர், 3 நாட்களுக்கு பின்னர் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு பின்னர் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.

KERALA

சர்ச்சைக்குரிய சுடுகாட்டினை அங்குள்ள ஆதிக்க ஜாதியினர் சுடுகாடாக பயன்படுத்தி வந்த நிலையில், சுடுகாட்டுக்கு அருகே உள்ள 10 சென்ட் நிலத்தினை வாங்கி அதனையும் சுடுகாட்டுடன் இணைத்துள்ளனர். எதிர்ப்பு தெரிவித்த ஜாதியினர் முதலியார் சமூகத்தினர் என்று தெரியவருகிறது. இதனால் தங்களுக்கென தனியொரு சுடுகாடு நிலம் வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சக்கிலிய சமூகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். உள்ளூர் பாஜக நிர்வாகி சீனிவாசன் என்பவர் கூறுகையில், "இது ஜாதிய பிரச்சனை கிடையாது. இதற்கும் ஜாதிக்கும் சம்பந்தம் இல்லை. இரண்டு பிராந்தியத்திற்கு இடையிலான பிரச்சனை.

இங்கு வசித்து வரும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒவ்வொரு சுடுகாடு உள்ளது. சர்ச்சைக்குரிய சுடுகாடு தனியாருக்கு சொந்தமானது. இதில், வெளியில் இருந்து யாரின் உடலையும் கொண்டு வந்து தகனம் செய்ய இயலாது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய சுடுகாடு அருகே 3 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கு சென்று உடலை தகனம் செய்ய கூறப்பட்டது. அதுவே தற்போது வேறொரு பிரச்சனையாக உருவாகியுள்ளது" என்று தெரிவித்தார். எங்களுக்கென ஒரு மயானம் இருந்தால் எங்களவர்களின் உடலை பிரச்சனை இல்லாமல் நாங்கள் அடக்கம் செய்துகொள்வோம் எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிகின்றனர்.

Soruce: TheNewsMinute: A death in Attappady lays bare Kerala’s open secret of caste discrimination https://www.thenewsminute.com/article/death-attappady-lays-bare-kerala-s-open-secret-caste-discrimination-159342