புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
யூடியூப் தம்பதி விபரீதம்; கணவன் - மனைவியாக அதிர்ச்சி செயல்.!
கேரளா மாநிலத்தில் உள்ள குமரி - கேரளா எல்லை, பாறசாலை, கிணற்றுமுக்கு பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் (வயது 45). இவரின் மனைவி பிரியா (வயது 40). தம்பதிகளின் மகன் எர்ணாகுளத்தில் செயல்பட்டு வரும் கல்லூரியில் படித்து வருகிறார்.
செல்வராஜ் - பிரியா தம்பதிகள் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். தங்களின் யூடியூப் சேனலில் வீடு நிகழ்ச்சிகள், சமையல் குறிப்புகள் உட்பட பல விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றனர். இறுதியாக 4 நாட்களுக்கு முன்னதாக வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: #JustIN: கோவில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்துச்சிதறி சோகம்; 154 பேர் படுகாயம்.. கேரளாவில் துயரம்.!
தாய்-தந்தை தூக்கிட்டு தற்கொலை
இதனிடையே, எர்ணாகுளத்தில் இருக்கும் மகன் சம்பவத்தன்று வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் கதவு திறந்து இருந்துள்ளது. வீட்டிற்குள் பெற்றோர் சடலமாக தூக்கில் தொங்குவதை கண்டுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மகன், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: #Breaking: அச்சச்சோ என்னாச்சு?.. கேரளா முதல்வரின் உயிர் தப்பியது.. நடந்தது என்ன?.. பகீர் சம்பவம்.!