கர்ப்பிணி ஆட்டையும் விட்டுவைக்காத பயங்கரம்.. பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. கேரளாவில் பரபரப்பு சம்பவம்.!

கர்ப்பமாக இருக்கும் ஆட்டினை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பேரதிர்ச்சி சம்பவம் காசர்கோட்டில் நடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டம், கோட்டச்சேரி நகரில் எலைட் ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலுக்கு சொந்தமான பண்ணையில் ஊழியரால் ஆடுகள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், அதில் ஒரு ஆடு கர்ப்பமாக இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மதியம் 1.30 மணியளவில் ஆட்டின் அபயக்குரல் கேட்டுள்ளது. இதனைக்கேட்டு சந்தேகித்த ஊழியர் விரைந்து சென்றபோது, 3 பேர் கும்பல் சுவரேறிக்குதித்து ஓடியுள்ளது.
அவர்களை விரட்டிச்சென்ற ஊழியர் ஒருவரை பிடித்த நிலையில், கர்ப்பிணி ஆட்டினை சென்று பார்க்கும் போது உயிரிழந்து கிடந்துள்ளது. மேலும், ஆட்டை பாலியல் பலாத்காரம் செய்ததற்கான தடயமும் தென்பட்டுள்ளன. இதனால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஊழியரால் பிடிக்கப்பட்ட செந்திலை கைது செய்தனர்.
இவரும் நடத்திய விசாரணையில், செந்தில் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக எலைட் ஹோட்டலில் வேலைக்கு வந்துள்ளார். பின்னர், அவர் பணியில் இருந்து சில நாட்களிலேயே நின்றுள்ளார். இவரிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து, தப்பியோடிய 2 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.