திருமணம் ஆன பெண்ணுடன் காதல்.. காதல் தோல்வியில் வாலிபர் தற்கொலை.!

திருமணம் ஆன பெண்ணுடன் காதல்.. காதல் தோல்வியில் வாலிபர் தற்கொலை.!


Kerala Guruvayur Man Suicide Love Failure at Erode

கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர், தாழைக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் (வயது 41). இவரின் மனைவி கருத்து வேறுபாட்டால் கடந்த 11 வருடத்திற்கு முன்னதாக கணவரை பிரிந்து சென்றுள்ளார். மனைவி மற்றும் மகள் பிரிந்து சென்றுவிட்டதை தொடர்ந்து, ரியாஸ் பெங்களூரில் உள்ள உணவகத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, அவ்வப்போது அங்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில், ரியாஸ் பெங்களூரை சேர்ந்த திருமணமான பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு திருமணம் ஆனதால், அவரை மறக்க இயலாமல் தவித்து வந்துள்ளார். நேற்று இரவில் உறவினர் நிஷாத்துக்கு (வயது 48) தொடர்பு கொண்ட ரியாஸ், வீடியோ காலில் பேசியுள்ளார். 

அப்போது, நான் காதலித்த பெண்ணை வேறொரு வாலிபர் திருமணம் செய்துகொண்டார். என்னால் வாழ இயலவில்லை. நான் தற்கொலை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அழைப்பை துண்டித்த ரியாஸ், தூக்கிட்டு தற்கொலை செய்ய தொடங்கியுள்ளார். 

KERALA

நண்பனுக்கு மீண்டும் மீண்டும் என பலமுறை நிஷாந்த் அழைக்க, வீட்டின் உரிமையாளர் மகன் ரியாஷின் செல்போன் அதிக நேரம் ஒழித்துஒக்ண்டு இருந்ததால் அங்கு சென்று பார்த்துள்ளார். ரியாஸ் தூக்கில் தொங்கி இருப்பதை கண்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளார். 

பின்னர், இந்த விஷயம் தொடர்பாக கோபிசெட்டிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ரியாஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். குருவாயூரில் இருந்து ரியாஸின் உறவினர்களும் கோபிச்செட்டிபாளையத்திற்கு விரைந்துள்ள நிலையில், அவர்களின் நடந்தது என்ன? என அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.