இந்தியா

அதிர்ச்சி.! அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு.. மாநில பேரிடர் என முதல் மந்திரி அறிவிப்பு..!

Summary:

Kerala declare corono virus as state disaster

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இதுவரை 300 பேருக்கு மேல் இறந்துள்ள நிலையில் 17 ஆயிரம் பேருக்கு மேல் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனாவில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த சில மாணவர்களுக்கு இந்த வைரஸ் தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவை சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக ஒருவருக்கு வைரஸ் தோற்று இருப்பது கேரளாவில் பெரும் பீதியை ஏற்படுத்திவருகிறது.

வைரஸ் பாதிக்கப்பட்ட அந்த நபர் கேரளாவில் உள்ள ஆலப்புழா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதனிடையே கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை மாநில பேரிடராக முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று அறிவித்துள்ளார்.


Advertisement