"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
அமைச்சரின் மகன் வீடியோ?.. விசாரணையில் அதிர்ச்சி திருப்பம்..! பிரபல ஜோதிடரின் மகன் பரபரப்பு கைது.!
கர்நாடக மாநிலத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் எஸ்.டி சோமசேகர். இவர், பெங்களூர் யஷ்வந்த்புரம் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். இவரின் மகன் நிஷாந்த். கடந்த டிச. 25 ஆம் தேதி அமைச்சரின் உதவியாளரான சீனிவாஸ் கவுடா மற்றும் பானு பிரகாஷுக்கு நிஷாந்த் இளம்பெண்ணுடன் இருப்பது போன்ற வீடியோ அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்யாமல் இருக்க கோடிக்கணக்கில் பணம் வேண்டும் என மர்ம நபர் மிரட்டல் விடுத்த நிலையில், நிஷாந்தின் கவனத்திற்கு வீடியோ கொண்டு செல்லப்படும் போது, அந்த வீடியோ போலியானது என தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பெங்களூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர், குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவல் துறையினர், பெங்களூரை சார்ந்த பிரபல ஜோதிடரின் மகனான ராகுல் பட் என்பவரை நேற்று கைது செய்தனர். இவர் மந்திரியின் மகனுடன் இளம்பெண் இருப்பது போல போலியான வீடியோ தயாரித்து பணம் பறிக்க முயற்சித்தும் அம்பலமானது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.