வேண்டாம்.. வேண்டாம் என கெஞ்சிய சிறுவன்.. தந்தையை நம்பி தண்ணீரில் அடித்துச்செல்லப்படும் காட்சி.. வைரல் வீடியோ..

வேண்டாம்.. வேண்டாம் என கெஞ்சிய சிறுவன்.. தந்தையை நம்பி தண்ணீரில் அடித்துச்செல்லப்படும் காட்சி.. வைரல் வீடியோ..


karnataka-tumkur-father-and-son-fallen-in-river-viral-v

ஆற்றில் விளையாடிக்கொண்டிருந்த தந்தையும், மகனும் நீடில் அடித்துச்செல்லப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.

குறிப்பிட்ட சம்பவமானது கர்நாடாக மாநிலம் தும்கூர் அருகே நடந்துள்ளது. 1 நிமிடம் 6 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ காட்சியில், மக்கள் அங்குள்ள ஆற்றில் கூட்டமாக விளையாடிக்கொண்டிருக்கும்நிலையில், ஒரு தந்தையும் அவரது மகனும் நீரில் இறங்கி விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.

அப்போது சிறுவனை அவரது தந்தை நீரில் தனியாக நின்று விளையாடு என்பதுபோல சிறுவனை வற்புறுத்துகிறார். ஆனால் வேண்டாம் வேண்டாம் என சிறுவன் மறுத்தும் விபரீதம் புரியாமல்அவரது தந்தை சிறுவனை நீரின் பக்கம் தள்ளுகிறார்.

சிறிது நேரத்தில் சிறுவன் கால் தவறி நீரில் விழுந்தநிலையில், நீரின் வேகத்தில் சிறுவன் அடித்துச்செல்லப்படுகிறான். சிறுவனை காப்பாற்ற அவனது தந்தையும் கூடவே செல்ல, அவரையும் நீர் அடித்துச்செல்கிறது. நீரில் அடித்துச்செல்லப்பட்ட இருவரையும் அங்கிருந்த பொதுமக்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.