நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
மதுபழக்கத்தை கைவிடாத மகனை உயிருடன் எரித்த தந்தை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள தொட்டபள்ளாபூர், வணிகரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமையா (வயது 58). இவரின் மகன் ஆதர்ஷ் (வயது 28). மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஆதர்ஷ் தினமும் மதுபோதையில் பெற்றோரை துன்புறுத்தி வந்திருக்கிறார்.
இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் போதை ஒழிப்பு மையத்தில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னரும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மதுபோதையில் தனது தாயாரை அவர் பயங்கரமாக தாக்கியுள்ளார்.

அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜெயராமையா தனது மகனை மரத்தில் கட்டிவைத்து பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்தார். இதில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.