கஞ்சா வளர்த்து விடுதியில் சப்ளை செய்த மருத்துவக்கல்லூரி மாணவர் கூட்டாளிகளுடன் கைது..!

கஞ்சா வளர்த்து விடுதியில் சப்ளை செய்த மருத்துவக்கல்லூரி மாணவர் கூட்டாளிகளுடன் கைது..!



Karnataka Student Ganja Issue

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிவமொக்கா மாவட்டத்தைச் சார்ந்தவர் விஷ்ணு ராஜ். இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட விஷ்ணு ராஜ், தனது படிப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீட்டிலேயே கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார். 

இதற்காக தனது வீட்டில் பிரத்யேக அறையையும் ஏற்பாடு செய்த நிலையில், அவருக்கு வினோத்குமார் மற்றும் பாண்டி டோரை என்ற இரண்டு நபர்கள் உதவி செய்துள்ளனர். இவர்கள் தங்கள் வளர்த்த கஞ்சா செடிகளை கல்லூரியிலேயே மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த நிலையில், இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

karnataka

தகவலின் பேரில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 100 கிராம் கஞ்சா விதைகள், 200 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.