இந்தியா

500 கோடி செலவு! 1 லட்சம் அழைப்பிதழ்கள்! களைகட்டும் 9 நாள் தடபுடல் கொண்டாட்டம்! இது யார் வீட்டு திருமணம் தெரியுமா?

Summary:

karnataka minister daughter marriage

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த  பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு இவர் தனது மகனின் திருமணத்தை 500 கோடி செலவு செய்து, ஒரு லட்சம் அழைப்பிதழ்கள் அடித்து ஒன்பது நாட்கள் மிகவும் பிரமாண்டமாக நடத்தி வருகிறார். இது அம்மாநில மக்களிடையே மாபெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் ஸ்ரீராமுலு.இவரது மகள் ரக்ஷிதா.இவருக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிகுமார் என்பவருடன் மார்ச் 5ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் ராமுலு தனது மகளின் திருமணத்தை கோலாகலமாக,  பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார். அதற்காக  500 கோடி பணத்தை  வாரி இறைத்து  திருமண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செந்தூரம், குங்குமம், சந்தனம்,  அரிசி உள்ளிட்டவை அடங்கிய  ஒரு லட்சம் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்க பட்டுள்ளது. மேலும் திருமணத்திற்காக 100 ஏக்கர்  நிலம் கொண்ட, பெங்களூரு பேலஸ் மைதானத்தில் 40 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு ஹம்பியில் உள்ள புகழ்பெற்ற விருபாக்ஷி கோவிலை மனதில்கொண்டு பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது.

மேலும் 9 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மூன்று மாதங்களாக மாபெரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அமைச்சர் ஸ்ரீராமுலு தனது  மகளுக்கு மேக்கப் போட நடிகை  தீபிகா படுகோனே திருமணத்திற்கு மேக்கப் போட்ட காஸ்ட்யூம் டிசைனர்,  மேக்கப்மேன் ஆகியோர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். 

அதனை தொடர்ந்து  திருமண புகைப்படங்கள் எடுப்பதற்கு அம்பானி வீட்டில் புகைப்படம் எடுத்த நபர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். இந்நி  ஐந்தாம் தேதி நடக்கும் அந்த திருமண நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,  அமித்ஷா உள்ளிட்டோர்  கொள்வர் என தகவல்கள்  வெளிவந்துள்ளது.


Advertisement