"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
ரூ.10 இலட்சம் பங்குக்காக, சொந்த தந்தையை கொடூரமாக கொலை செய்த 2 மகன்கள்..!
சொத்தை விற்பனை செய்ய வந்த இடத்தில், மகன்கள் பங்கை கொடுக்காமல் இழுத்தடித்ததால் தந்தை கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மகன்களே தந்தையை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டனா, கேரேமேகல கொப்பலு கிராமத்தில் வசித்து வருபவர் மரிக்கலயா (வயது 68). இவர் கால் டாக்சி ஓட்டுநராக இருந்து வரும் நிலையில், சொந்தமாக 8 ஏக்கர் விவசாய நிலத்தையும் வைத்துள்ளார். தனது பணி ஊவிக்கு பின்னர் கிடைத்த வருமானத்தை வைத்து சொந்த ஊரில் மரிக்கலயா வசித்து வந்துள்ளார்.
இவருக்கு சசிகுமார், ராஜேஷ் என்ற 2 மகன்கள் இருக்கிறார். மரிக்கலயா சமீபத்தில் தனது விளைநிலத்தின் ஒரு பகுதியை (1 ஏக்கர்) விற்பனை செய்ய முடிவெடுத்து, அதனை ரூ.30 இலட்சத்திற்கு விற்பனை செய்து 3 பேர் பங்குபிரித்துக்கொள்ளலாம் என்று மகன்களிடம் தெரிவித்துள்ளார்.
முதலில் சம்மதம் தெரிவித்த மகன்கள், பணத்தை பெற்றுக்கொண்டதும் அதனை தந்தையிடம் கொடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் பணம் கொடுத்தால் மட்டுமே கையெழுத்து என மரிக்கலயா திட்டவட்டமாக தெரிவித்துவிட, பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து அவர் கையெழுத்து போடாமலேயே வெளியேறி இருக்கிறார்.
மேலும், தனது உயிருக்கு அச்சம் இருப்பதாக காவல் நிலையத்திலும் மரிக்கலயா புகார் அளித்திருந்த நிலையில், நேற்று இரவில் தந்தையின் வீட்டிற்கு சென்ற 2 மகன்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். உயிருக்கு போராடும் இறுதி தருவதில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த மரிக்கலயா பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மரிக்கலயாவின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அவர் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், மரிக்கலயாவின் மகன்களான சசிகுமார் மற்றும் ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.