இந்த காலத்தில் இப்படியும் ஒரு கணவரா.. இறந்த மனைவியின் ஆசையை 3 வருடங்கள் கழித்து நிறைவேற்றிய கணவர்.!Karnataka-Man-Celebrates-House-Warming-Ceremony

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் பாக்யநகரை சேர்ந்தவர் சீனிவாஸ் குப்தா-மாதவி தம்பதியினர். சீனிவாஸ் குப்தா தொழில் அதிபர் ஆவார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு எதிர்பாராத விபத்தில் சிக்கி மாதவி இறந்துள்ளார்.

சீனிவாஸ், மனைவி இறந்த பிறகு தனது 2 மகள்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் பாக்யநகரில் சீனிவாஸ் புதிதாக வீடு ஒன்றை கட்டி, புதுமனை திறப்பு விழாவினை நடத்தியுள்ளார். அப்போது விழாவிற்கு வந்தவர்கள் வீட்டில் நுழைந்ததும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காரணம் இறந்த மாதவி புதிய வீட்டின் மாடியில் உள்ள ஷோபாவில் அமர்ந்து இருந்த காட்சி தான்.அவர்கள் ஷோபா அருகே சென்று பார்த்த போதுதான் ஷோபாவில் அமர்ந்து இருந்தது மாதவியை போன்ற தோற்றம் கொண்ட மெழுகு சிலை என்பது தெரியவந்தது.

மேலும் இது குறித்து உறவினர்கள் சீனிவாஸ் குப்தாவிடம் கேட்டுள்ளனர். அதற்கு குப்தா இறந்த எனது மனைவியின் ஆசை இது தான். ஆனால் அவளது ஆசை நிறைவேறுவதற்குள் விபத்தில் இறந்து விட்டாள். அவளின் ஆசையை நிறைவேற்ற நினைத்து தான் மெழுகில் அவரது சிலையை செய்து அழகு பார்த்து வருவதாக கூறியுள்ளார்.