இந்தியா

நா மெதுவாத்தான் போவேன்.. அரை மணி நேரம் நடுரோட்டில் தண்ணி காட்டிய பாம்பு.. வைரல் வீடியோ...!

Summary:

போக்குவரத்து அதிகம் மிகுந்த சாலையில் நல்ல பாம்பு ஒன்று சாலையை கடக்கும் வீடியோ காட்சி இணையத

போக்குவரத்து அதிகம் மிகுந்த சாலையில் நல்ல பாம்பு ஒன்று சாலையை கடக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பி கல்சன்கா சந்திப்பில் திடீரென நாகப்பாம்பு ஒன்று வந்துள்ளது. பொதுவாக இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். இந்நிலையில் சாலையில் திடீரென நாக பாம்பு ஒன்று வருவதை பார்த்த அங்கிருந்த போக்குவரத்துக்கு போலீசார் உடனே அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தினர்.

மேலும் சாலையை கடக்கும் பாம்பிற்கும், அந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கும் எதுவும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போக்குவரத்துக்கு போலீசார் பார்த்துக்கொண்டனர். மேலும் அந்த பாம்பு சாலையை கட்ட சுமார் 30 நிமிடம் எடுத்துக்கொண்டதால், அந்த பகுதியில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் பாம்பு சாலையை கடக்கும் காட்சியை அங்கிருந்த மக்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட, தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement