நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பேருந்து.. சிதறியோடிய பயணிகள்.. 30 பேருக்கு அதிஷ்டம்.!

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பேருந்து.. சிதறியோடிய பயணிகள்.. 30 பேருக்கு அதிஷ்டம்.!


Karnataka BMTC Bus Fired and Burned Roadside Due to Electrical Connection Issue

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் சவுத் சர்க்கிள் பகுதியில், கர்நாடக மாநகர பி.எம்.டி.சி பேருந்து பயணம் செய்துகொண்டு இருந்தது. பேருந்தில் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், பேருந்தின் முன்புறத்தில் இருந்து திடீரென புகை கிளம்பியுள்ளது. 

இதனைகவனித்த ஓட்டுநர் பேருந்தை உடனடியாக சாலையோரம் நிறுத்தி, பயணிகளை இறங்க கூறியுள்ளார். பேருந்தில் புகை வருவதை கண்டு பதறிப்போன பயணிகள், அதில் இருந்து இறங்கி சிதறியோடினர். 

karnataka

பயணிகள் இறங்கிய சில நொடிகளில் பேருந்தும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விஷயம் குறித்து உள்ளூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை அணைத்தனர். ஆனால், பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்துவிட்டது. 

இந்த விஷயம் தொடர்பாக பசவனகுடி போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பேருந்தில் உள்ள வயரில் ஏற்பட்ட உரசலால் பேருந்து தீ பிடித்து எரிந்துள்ளது என தெரிவித்தனர்.