இந்தியா

3 மனைவியுடன் வாழ்ந்து வந்தவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த கும்பல்.. நடுரோட்டில் பயங்கரம்.!

Summary:

3 மனைவியுடன் வாழ்ந்து வந்தவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த கும்பல்.. நடுரோட்டில் பயங்கரம்.!

தொழிலதிபர் 3 திருமணம் செய்து மனைவிகளுடன் தனித்தனியே வசித்து வந்த நிலையில், காரில் செல்லும் போது மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி, பவானி நகரில் வசித்து வருபவர் ராஜு மல்லப்பா (வயது 45). இவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்து வருகிறார். இவரின் மனைவி உமா. இருவருக்கும் கடந்த 22 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், ராஜு மல்லப்பா கடந்த 8 வருடத்திற்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரை சேர்ந்த கிரானாலா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணிற்கும் - ராஜுவிற்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், கடந்த வருடம் தீபா என்ற பெண்ணை 3 ஆவதாக திருமணம் செய்துள்ளார். 

ராஜு மல்லப்பாவின் மூன்றாவது மனைவி தீபா 3 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், 3 மனைவிகளுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளார். இதனால் முதல் மனைவி உமா தனது குழந்தைகளுடன் பெங்களூரில் வசித்து வரும் நிலையில், பிற 2 மனைவியுடன் ராஜு பெலகாவியில் வசிக்கிறார். 

நேற்று காலை நேரத்தில் ராஜு காரில் வெளியே சென்ற நிலையில், அவரை இடைமறித்த மர்ம நபர்கள் காரில் இருந்து வெளியே தள்ளி கண்களில் மிளகாய்பொடி தூவி சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் ராஜு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பெலகாவி காவல் துறையினர், ராஜு மல்லப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement