வேலைபார்த்த காவல் இணை ஆணையரின் வீட்டிலேயே கைவைத்த வேலைக்காரி.!



Karnataka Bangalore Traffic Assistant Commissioner House Money Jewel Robbery

போக்குவரத்து காவல் இணை ஆணையரின் வீட்டில் பணியாற்றிவந்த வேலைக்கார பெண்மணி நகை, பணத்தை திருடிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் மாநகர போக்குவரத்து இணை காவல் ஆணையராக பணியாற்றி வருபவர் ரவிகாந்த்தே கவுடா. இவர் பெங்களூரில் உள்ள சஞ்சய் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இருந்து பணம் மற்றும் விலையுயர்ந்த செல்போன்கள் திருடுபோய் இருந்துள்ளது. 

இதனையடுத்து, இதுகுறித்து இணை ஆணையரிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் ஜெகதீஷ் சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். 

karnataka

விசாரணையில், ரவிகாந்த்தே கவிதாவின் வீட்டில் பணியாற்றி வந்த அங்கிதா என்ற பெண்மணி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக யாரிடமும் சொல்லாமல் வேலையில் இருந்து நின்றுள்ளது தெரியவந்தது. அவர் தலைமறைவாக இருந்ததால், காவல் துறையினர் அவரை தேடி வந்தனர். 

நேற்று அங்கீதாவை கைது செய்த காவல் துறையினர், விசாரணை செய்ததால் அவர் திருட்டு செயலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். வீட்டில் ஆட்கள் இல்லாததை உபயோகம் செய்து பணம், நகை, விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை அங்கிதா திருடியுள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.