இந்தியா

டிசம்பர் 31 வரை பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பே இல்லை.! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு.!

Summary:

கர்நாடக மாநிலத்தில் வருகிற டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தநிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தப்பட்டு வந்தது.
 
இதற்கிடையே, பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்தநிலையில் நாட்டின் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில் கொரானாவின் இரண்டாவது அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் திறந்த பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் வருகிற டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அம்மாநில முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா, தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனேவ , வருகிற டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறப்பது இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.


Advertisement