கர்நாடகா முன்னாள் முதல்வருக்கும் கொரோனா தொற்று உறுதி! மருத்துவமனையில் அனுமதி!



karnadaka-former-cm-affected-by-corona

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

corona

தற்போது அரசியல் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா உறுதியானது. இதனைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கும் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது நேற்றைய சோதனையில் உறுதிசெய்யப்பட்டது.

இந்தநிலையில், கர்நாடக முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.