தடுக்கி விழுந்த கேமராமேனை ஓடிவந்து தூக்கும் ராகுல்காந்தி; வைரலாகும் வீடியோ.!

தடுக்கி விழுந்த கேமராமேனை ஓடிவந்து தூக்கும் ராகுல்காந்தி; வைரலாகும் வீடியோ.!


Kancers party national leader rahulji video

தடுக்கி விழுந்த கேமராமேனை ஓடி வந்து தூக்கி உதவி செய்யும் ராகுல் காந்தியின் வீடியோ தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக செயல்படுபவர் ராகுல் காந்தி. எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். வெற்றி பெறும் ஒரே நோக்கோடு பல அதிரடி நடவடிக்கைகளையும் கையாண்டு வருகிறார். அதில் முக்கியமாக பார்க்கப்பட்டது உத்தர பிரதேசம் மாநில கிழக்குப் பகுதியின் பொதுச் செயலாளராக தனது சகோதரி பிரியங்கா காந்தியை நியமனம் செய்தது.

இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற ராகுல் காந்தியை படம்பிடிக்க முயன்ற தனியார் பத்திரிகை நிறுவனத்தின் கேமராமேன் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுகிறார். அதனைக் கண்டதும் ஓடிவந்து அவருக்கு உதவி செய்யும் ராகுல் காந்தியின் வீடியோ தற்சமயம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.