ஜேபி நட்டாவின் அறிவிப்பு... பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்படும் புதிய பொறுப்பு...!



JP Natta's announcement... BJP state president Annamalai will be given new responsibility...

பிஜேபி தேசிய தலைவர் ஜே பி நட்டா தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பை வழங்கியுள்ளார்.

தற்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி கர்நாடகத்தில் நடைபெறுகிறது. இந்த அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. தேர்தலுக்கு மூன்று மாதங்கள் உள்ள நிலையில்  தற்போது அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் வரும் கர்நாட மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமனம் செய்யப்படுகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இணை பொறுப்பாளராக நியமனம் செய்யப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பத்து வருடங்கள் காவல் அதிகாரியாக அண்ணாமலை பணியாற்றியுள்ளார். எனவே அங்குள்ள அரசியல் சூழல் அவருக்கு நன்கு புரியும் என்பதாலும் மேலும் அவருடைய  பணி அனுபவம் கைகொடுக்கும் என்பதாலும் தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் தேர்தல் கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு போன்றவை இவர்கள் இருவரின் மேற்பார்வையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.