இந்தியா

எழுத்து தேர்வே இல்லாமல் ரயில்வேயில் சூப்பிரவைசர் வேலை! யாரும் மிஸ் பண்ணிடாதிங்க!

Summary:

job in indian railway


இந்தியன் ரயில்வே (ஐ.ஆர்.சி.டி.சி) நிறுவனத்தின் தெற்குமண்டலத்தில் சூப்பிரவைசர் ஹாஸ்பிடாலிட்டி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு மொத்தம் 74 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

தகுதி:
B.sc hospitality and hotel administration, food and beverage நிறு வனத்தில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், இந்த பணிக்கான நேர்காணலில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:
இந்த பணிக்கான விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் 11-ஆம் தேதியும், பெங்களூருவில் 13-ஆம் தேதியும், சென்னையில் 15-ஆம் தேதியும் நேர்காணல் நடக்கிறது. தேவையான சான்றுகளை நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இது பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள www.irctc.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
 


Advertisement