தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
செல்போனில் பேச விடாதததால் 2 வயது மகன் கழுத்தை நெரித்துக்கொலை: தாய் அதிர்ச்சி செயல்.!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிடிஸ் மாவட்டத்தில் வசித்து வருபவர் நிஜாமுதீன். இவருக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற முடிந்தது. நிஜாமுதீனின் மனைவி அப்ஷனா. தம்பதிகளின் மகிழ்ச்சிக்கு அடையாளமாக இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன.
கடந்த சில நாட்களாக நிஜாமுதீன் மற்றும் அவரது மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் கடுமையான வாக்குவாதம் செய்துவிட்டு பின் அமைதியாக தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சம்பவத்தன்று தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அப்ஷனா, தனது 2 வயது மகனுடன் வீட்டில் இருந்த அறைக்கு சென்று கதவை மூடியுள்ளார். பின் செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த நிலையில் மகன் அழுததாக தெரிய வருகிறது.
இதனால் ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்றவர் தனது குழந்தையின் கழுத்தை நெரிக்கவே, குழந்தை பரிதாபமாக மூச்சு திணறி உயிரிழந்தது. அறைக்குள் வந்த நிஜாமுதீன் தனது குழந்தை அசைவின்றி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்ற போது குழந்தையின் உயிரிழப்பு செய்யப்பட்டது. பின் இந்த விஷயம் தொடர்பாக கணவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி அப்சனாவை கைது செய்தனர்.