ஜார்கண்டில் பயங்கரம்... 2 பெண்கள் ஒரே இடத்தில் கொலை.!! வாலிபர் வெறி செயல்.!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 பெண்களை கொலை செய்த நபர் அளித்திருக்கும் பரபரப்பு வாக்குமூலம் காவல்துறையினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அந்த நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் 2 பெண்கள் காணாமல் போனது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக காணாமல் போன ஒரு பெண்ணின் காதலனிடம் காவல்துறை விசாரணை நடத்திய போது 2 பெண்களையும் கொலை செய்ததாக அந்த நபர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் சவுத்ரி என்ற நபர் காணாமல் போன பெண்களில் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். மேலும் அந்தப் பெண் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததால் அவரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டிய ஸ்ரீகாந்த், தனது காதலியை தனியாக காட்டுப்பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவரது காதலி தனது தோழியுடன் சென்றிருக்கிறார்.
இதையும் படிங்க: "அவன்கிட்ட எத கண்ட..." காதலிக்க மறுத்த பெண்.!! சுட்டு கொன்ற காதலன்.!!
இதனால் 2 பேரையும் கொலை செய்ததாக அந்த நபர் போலீஸிடம் தெரிவித்துள்ளார். அவரது வாக்குமூலத்தை தொடர்ந்து அந்த நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் 2 பெண்களின் சடலங்களை கைப்பற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: "சாக்கடையில் மிதந்த தலை..." போதைக்கு அடிமையான மனைவி கொலை.!! கணவன் பரபரப்பு வாக்குமூலம்.!!