"சாக்கடையில் மிதந்த தலை..." போதைக்கு அடிமையான மனைவி கொலை.!! கணவன் பரபரப்பு வாக்குமூலம்.!!



man-murders-drug-addict-wife-put-her-head-in-drainage

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பிவன்டி பகுதியில் கழிவு நீர் ஓடையில் வெட்டி வீசப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் தெரிய வந்திருக்கிறது. எனினும் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறுவதால் காவல்துறையினர் குழப்பமடைந்துள்ளனர்.

மும்பையின் பிவன்டி பகுதியில் கழிவுநீர் ஓடையில் பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அந்தப் பெண்ணின் உடல் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் இறந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த முஸ்கான்(22) என்பது தெரிய வந்தது.

India

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் கணவர் தாஹா என்பவரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் தனது மனைவி போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்ததால் அவரை கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி கழிவுநீர் ஓடையில் வீசியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தது காவல்துறையினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பகீர் சம்பவம்.. 60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.!! பலாதக்காரம் செய்து படுகொலை.!!

மேலும் அந்த நபர் கொலைக்கான காரணத்தை மாற்றிக் கொண்டே இருப்பதால் காவல்துறை கடும் குழப்பத்தில் இருக்கிறது. கொலைக்கான காரணம் என்ன.? என்பது பற்றி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண் கொலை செய்யப்பட்டு அவரது உடல் பாகங்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: "உனக்கு சொத்து தரமாட்டாரு.." தந்தை எரித்து கொலை.!! காதலியுடன் கைது செய்யப்பட்ட மகன்.!!