நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
8 மாத குழந்தைக்கு சளி குறைய விக்ஸ் மற்றும் கற்பூரத்தை மூக்கில் தடவிய தாய்! அடுத்து சில நொடிகளில் துடித்துடித்த குழந்தை! மறுநாள் அதிகாலை... பெரும் அதிர்ச்சி சம்பவம்!
சென்னை அபிராமபுரம் பகுதியில் 8 மாத குழந்தை, விக்ஸ் மற்றும் கற்பூரம் மூக்கில் தடவியதையடுத்து மூச்சுத் திணறலால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
அபிராமபுரம் டாக்டர் ராதாகிருஷ்ணபுரத்தில் வசிக்கும் தேவநாதனுக்கு 8 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த சில நாட்களாக சளி பிரச்சனை அதிகமாக இருந்ததால், ஜூலை 13ம் தேதி மாலை, சளி குறைய வேண்டுமென்று விக்ஸ் மற்றும் கற்பூரத்தை கலந்து குழந்தையின் மூக்கில் தடவியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும், தீவிர சிகிச்சைக்குப் பிறகும், குழந்தை ஜூலை 16 அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்தது.
இதையும் படிங்க: பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இரண்டாவது மாநில மாநாடு.! எங்கு? எப்பொழுது?? தவெக தலைவர் நடிகர் விஜய் அறிவிப்பு!!
இது சளியின் காரணமா அல்லது விக்ஸ்-கற்பூரம் கலவையின் தாக்கமா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. பிரேத பரிசோதனை முடிவுகள் மூலம் காரணம் உறுதி செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து, குழந்தைகளுக்கு வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தும் போது, குறிப்பாக விக்ஸ், கற்பூரம் போன்றவை பயன்படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசனை அவசியம் என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தச் சம்பவம், வீட்டு வைத்திய முறைகள் சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான விழிப்புணர்வாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: தாம்பரம் ரயில் நிலையத்தில் திடீரென இன்ஜின் பெட்டி மீது ஏறிய இளம்பெண்! அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்! சென்னையில் பரபரப்பு...