தரையிறங்கிய விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்தவர் கைது.. பதறிப்போன பயணிகள்., சம்பவம் செய்த இண்டிகோ..!

தரையிறங்கிய விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்தவர் கைது.. பதறிப்போன பயணிகள்., சம்பவம் செய்த இண்டிகோ..!


Indigo Nagpur to Mumbai Flight Passenger Open Emergency Door During Landing Process He arrest

 

விமானம் தரையிறங்கும்போது அவசரகால கதவை திறந்தவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பயணிகளின் பாதுகாப்பில் இண்டிகோ எவ்வித சமரசமும் செய்துகொள்வது என அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் சென்றது. இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிக்கொண்டு இருந்துள்ளது. 

அப்போது, அவசர கால திறப்பு வழியில் உட்கார்ந்திருந்த இளைஞர், திடீரென அவசர கால வழியை திறந்துவிட்டார். இதனால் பயணிகள் பதறிப்போன நிலையில், அவர் மேற்படி ஏதும் சாகசம் செய்யாமல் இருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

indigo

இதனையடுத்து, விமான நிலைய பாதுகாவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இளைஞரை கைது செய்தனர். அவரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விமானத்தின் Emergency Door தொடர்பாக பல விவாதங்கள் தமிழக அளவில் நடைபெற்றுவிட்ட நிலையில், பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவும் அதே மாதிரியான சர்ச்சையில் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது..