இந்தியா உலகம்

வெளிநாட்டில் சென்று வசிக்கும் மக்கள்! உலகிலேயே இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Summary:

indians living in foreign

வெளிநாடுகளுக்கு சென்று வசிப்பவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் 17.5 மில்லியன் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வசித்து வருவது தெரிய வந்துள்ளது.

பொதுவாக எல்லா மனிதர்களும் தங்கள் வாழ்நாள் முழுவதையும் சொந்த நாட்டிலேயே வாழ்வதில்லை. ஏராளமான மக்கள் வேலைக்காகவும், படிப்பிற்காகவும், மாற்றத்திற்காகவும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். 

அயலநாட்டிற்கு செல்வோரில் பலர் வெளிநாடுகளிலேயே நிரந்தரமாக தங்கிவிடுகின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் மக்களின் கணெக்கடுப்பு புள்ளி விவரங்களை ஒரு சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் உலகம் முழுவதும் சுமார் 272 மில்லியன் பேர் சொந்த நாடுகளை விட்டு, வெளிநாடுகளில் வசித்து வருவது தெரிய வந்துள்ளது. இவர்களில் 17.5 மில்லியன் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வசித்து வருவது தெரிய வந்துள்ளது.

 


Advertisement