மக்களே உஷார்... நாளை புழுதிப்புயல் தாக்க வாய்ப்பு.!Indian IMD Announce North India Affect Dust Storm

வடக்கு பாகிஸ்தான் நிலப்பரப்பில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இந்த காற்று இந்திய நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வரும் காரணத்தால், வட இந்தியாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் புழுதிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குஜராத், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலத்தில் புழுதி புயலின் தாக்கம் இருக்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. 

India

பஞ்சாப், ஹரியானா மற்றும் வடமேற்கு உத்திர பிரதேசம் மாநிலத்தில் நாளை மழைக்கு வாய்ப்பும் உள்ளது. காஷ்மீர் போன்ற வட இந்திய மாநிலத்தில் பனிப்பொழிவு இருக்கலாம். வடமேற்கு இந்தியாவில் மழை பெய்யும் இடங்களில் புழுதி புயலின் தாக்கம் என்பது இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.