இந்தியா

கொரோனா சமயத்தில் சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள்! வேட்டையாடிய இந்திய படையினர்!

Summary:

Indian army killed 3 terrorist

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியதால், இந்தியா முழுவதும் மார்ச் 24 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  ஆனாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சமயத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பயங்கரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு அவ்வப்போது பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த தேடுதல் வேட்டையில் முக்கிய பயங்கரவாத அமைப்பின் தளபதி உட்பட 15க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்தநிலையில், நவுசரா எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தானால் பயிற்சியளிக்கப்பட்ட 3 பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் எல்லையில் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. அதில் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளும் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், இந்திய எல்லை முழுவதும் பலத்த பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


Advertisement