
india vs america - donald drump - economical problem
வளர்ந்து வரும் நாடு என்ற அடிப்படையில் வர்த்தக ரீதியில் இந்தியா பயன்பெறும் வகையில் முன்னுரிமை வர்த்தக நாடு என்ற சலுகையை இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கி வந்தது. இந்திய உள்நாட்டுச் சந்தையில் அமெரிக்காவை சமமாகவும், நியாயமாகவும் அணுக அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகளின் அடிப்படையில்,
அமெரிக்காவின் பொது முன்னுரிமை திட்டமான ஜிஎஸ்பில் (GSP) இந்தியா தகுதி பெற்றுது. இதன்மூலம் முன்னுரிமை வர்த்தக நாடு என்ற அடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 2000 பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஜிஎஸ்பி திட்டத்தின் கீழ் பெருமளவு பயனடையும் நாடாக இந்தியா இருந்தது.
இதன் மூலம் 190 மில்லியன் டாலர்கள் அளவுக்கு இந்தியாவுக்கு மிச்சமாகிறது. மேலும் 5.6 பில்லியன் டாலர் அளவிலான இந்திய ஏற்றுமதி பொருட்கள் அமெரிக்காவிற்குள் வரி விதிப்பின்றி நுழைகிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் அமெரிக்காவை சமமாக அணுக அனுமதிக்கவில்லை என்று கூறி, இந்தியாவிற்கு அளித்து வரும் முன்னுரிமை வர்த்தக நாடு என்ற தகுதியை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement