நெருங்கும் ஆபத்து.. இந்தியாவில் கிடுகிடுவென உயரும் ஓமைக்கிறான் பாதிப்பு!! பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா??

நெருங்கும் ஆபத்து.. இந்தியாவில் கிடுகிடுவென உயரும் ஓமைக்கிறான் பாதிப்பு!! பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா??


India omicron cases reach 100 positive cases

ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில்,  இந்தியாவில் ஓமிக்கிறான் வைரஸ் பாதிப்பு 100 ஐ கடந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய மாறுபாடான ஓமிக்ரோன் வைரஸ் மீண்டும் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை உலக சுகாதார நிறுவனம் ஆபத்தான கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.   Omicron கொரோனா புதிய உருமாறிய கொரோனா என்பதால் உலகின் பல்வேறு ஆய்வாளர்களும் இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருகின்றனர்.

corona

முதற்கட்ட ஆய்வுகளில் இது டெல்டா கொரோனாவை காட்டிலும் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இதன் பாதிப்பு டெல்டா வகை கொரோனாவை விட குறைவாகவே இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்தவகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்படமால் இருந்துவந்த நிலையில், தற்போது ஓமிக்கிறான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில், ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது தான் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் நாட்டு மக்கள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.