இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு செப்டம்பர்வரை நீடிக்கப்படலாம்..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.!

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு செப்டம்பர்வரை நீடிக்கப்படலாம்..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.!



India may not lift coronavirus lockdown before September

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடிவருகிறது. இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

21 நாட்கள் முடிந்து ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு நிறுத்தப்படுமா? நீட்டிக்கப்படுமா? பகுதியாக குறைக்கவோ அல்லது நீடிக்கப்படவோ வாய்ப்புள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

corono

இந்நிலையில், அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளில், இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது ஜூன் மாத இறுதி மற்றும் செப்டம்பர் மாத இரண்டாவது வாரத்துக்கு இடைப்பட்ட காலத்தில்தான் நீக்கப்படலாம் எனவும், அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்தே ஊரடங்கு முற்றிலும் நீக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில்தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் ஊரடங்கு சொன்னபடி ஏப்ரல் 14 வரைதான் இருக்கும் என முக்கிய தலைவர்கள் கூறிவரும் நிலையில், இந்த உத்தரவு நீட்டிக்கப்படுமா? நிறுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.