இந்தியா

Breaking News: பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்; பாகிஸ்தானில் அதிரடி தாக்குதல்

Summary:

india attacked pakistan

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.30 அளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குல் நடத்தி இருக்கிறது. இந்திய விமான படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக போர் விமானம் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானின் முசாபராபாத் பகுதிக்குள் புகுந்த இந்தியா ராணுவத்தின் போர்ப்படை விமானம் இந்த அதிரடி தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் அங்கு இருந்த இரண்டுக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது.

indian air force க்கான பட முடிவு

மொத்தம் 1000 கிலோ எடைகொண்ட வெடிப்பொருட்கள் மூலம் தாக்குதல் நடத்தினோம் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் உண்டாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

இந்திய ராணுவத்தின் போர் விமானம் ஒன்று எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் வந்ததாக பாகிஸ்தான் ராணுவம் இன்று காலையே புகார் அளித்து இருந்தது. பாகிஸ்தான் ராணுவம் அளித்துள்ள புகாரில், இந்தியா ராணுவத்தின் போர் விமானம் ஒன்று பாகிஸ்தானின் முசாபராபாத் பகுதிக்குள் வந்தது. ஆனால் பாகிஸ்தான் விமானப்படை வேகமாக செயல்பட்டு, பதிலடி கொடுத்தது. என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Advertisement