அப்பாவி இளைஞர்களை காவல் நிலையத்தில் வைத்து லாடம் கட்டிய கான்ஸ்டபிள்; கொடூரமாக தாக்குதல்.!
சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் இருவர் கொடூரமாக தாக்கப்பட்டனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் பகுதியில் வசித்து வரும் இளைஞர்கள் ஷாருக். இவரின் நண்பர் இர்ஷாத். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தை திருடியதாக புகார் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஜிம் பயிற்சியாளருடன் கள்ளக்காதல்.. "கழுத்தில் ஒரே பன்ச்".. தொழிலதிபர் மனைவி எரித்துக்கொலை.!
இதன்பேரில், சம்பவத்தன்று காவல்துறையினரால் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டவர்கள், கொடூரமாக தாக்கப்பட்டு இருக்கின்றனர். இதனால் அவர்களின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
தீப்புண் அடைந்ததுபோல் காயம்
காயம் பட்ட இடங்கள் தீப்புண் அடைந்ததுபோலவும், கடுமையாக தடி, பிளாஸ்டிக் பைப் போன்றவற்றால் தாக்கப்பட்டபோது போலவும் இருக்கிறது. இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.
मुरादाबाद, यूपी में बाइक चोरी के शक में 2 युवकों शाहरुख–इरशाद को पुलिस स्टेशन में लाकर बर्बरता से पीटा गया। फट्टे की पिटाई से शरीर पर जगह–जगह नीले निशान पड़ गए।
— Sachin Gupta (@SachinGuptaUP) October 28, 2024
मामले में सिपाही इमरान, गुलशन, प्राइवेट व्यक्ति शकील और 3 अन्य युवकों पर FIR दर्ज हुई। सिपाही सस्पेंड हुए। pic.twitter.com/yTVak0bH0x
காவல்துறையினர் விசாரணை
புகாரை ஏற்ற அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காவலர்களுக்கு எதிராக உண்மை அம்பலமாக, காவல் அதிகாரி இம்ரான், குல்ஷன், தனிப்பரான ஷகீல் ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காவலர்கள் இம்ரான், குல்ஷன் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே, பாதிக்கப்பட்டவர்கள் உடலில் இருந்த காயங்கள் குறித்த வீடியோ வெளியாகி பதறவைத்துள்ளது.
இதையும் படிங்க: உபியில் கொடூரம்... 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமி கற்பழிப்பு.!! குற்றவாளி கைது.!!