மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
மகளை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய தந்தை; தவறு செய்ததால் ஆத்திரம் தலைக்கேறி அதிர்ச்சி செயல்.!
குழந்தைகள் தவறு செய்வது இயல்பு எனினும், அதனை அன்பான முறையில் எடுத்துரைத்து அவர்களுக்கு தவறை உணர்த்த வேண்டும். மாறாக நாம் ஆத்திரத்தில் செய்யும் செயல் சில நேரம் உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லலித்பூர் மாவட்டம், பார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தமனா கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்த் ராய் ராஜகவார் (வயது 45). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 10 வயதுடைய மகள் இருக்கிறார்.
இதையும் படிங்க: பாஜக எம்.எல்.ஏவுக்கு பளார் விட்ட வழக்கறிஞர்; பரபரப்பான அதிகாரிகள்.. காரணம் என்ன?.!
இதனிடையே, சம்பவத்தன்று சிறுமி சிறிய தவறு ஒன்று செய்ததாக தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை, தனது மகளை கடுமையாக தாக்கி இருக்கிறார். மேலும், ஒருகட்டத்தில் ஆத்திரத்தில் மகளின் கால்களில் கயிறை கட்டி, தலைகீழாக தொங்கவிட்டு தாக்கியுள்ளார்.
வைரலான விடீயோவின் பேரில் தந்தை கைது
இதனால் சிறுமி தந்தையை விட்டுவிடச்சொல்லி கதறி இருக்கிறார். தந்தையின் காதில் மகளின் கதறல் சத்தம் கேட்காத நிலையில், அங்கு சென்ற நபர் ஒருவர் சம்பவத்தை வீடியோ எடுத்து சிறுமியை கீழே இறக்கி விடுமாறு கோவிந்தை அறிவுறுத்தினார்.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோவிந்தை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ललितपुर
— PRIME NEWS BHART UP (@presspradeep77) October 12, 2024
ललितपुर मे कलयुगी हैवान पिता ने नाबालिग बेटी की बेरहमी से की पिटाई
बेटी को बांधकर उल्टा लटकाकर पिटाई की
मारपीट का वीडियो सोशल मीडिया पर वायरल
बार थाना क्षेत्र के धमना गांव का मामला।@Uppolice pic.twitter.com/K38Y0i1uu0
இதையும் படிங்க: 14 வயது சிறுமி ஆசிட் ஊற்றிக் கொடூர கொலை; தந்தை-மகனாக படுபயங்கரம்.. நெஞ்சை நடுங்கவைக்கும் பேரதிர்ச்சி.!