பாஜக எம்.எல்.ஏவுக்கு பளார் விட்ட வழக்கறிஞர்; பரபரப்பான அதிகாரிகள்.. காரணம் என்ன?.!
முன்விரோதத்தில் பாஜக எம்.எல்.ஏவுக்கு பொது இடத்தில் பளார் விடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ யோகேஷ் வர்மா. இவர் இன்று லக்கிம்பூர் நகர்ப்புற கூட்டுறவு வங்கிக்கு சென்றுவிட்டு, பின் மீண்டும் வெளியே வந்து கொண்டு இருந்தார்.
அச்சமயம் எம்.எல்.ஏ வருகைக்காக காத்திருந்த வழக்கறிஞர் ஆவதேஷ் சிங், திடீரென எம்.எல்.ஏ-வை பாய்ந்து கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் பதறிப்போன அதிகாரிகள் விரைந்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமி ஆசிட் ஊற்றிக் கொடூர கொலை; தந்தை-மகனாக படுபயங்கரம்.. நெஞ்சை நடுங்கவைக்கும் பேரதிர்ச்சி.!
வீடியோ வைரல்:
மேலும், எம்.எல்.ஏ தாக்கப்பட்டதையடுத்து, அவரின் ஆதரவாளர்கள் சிங்கை சூழ்ந்துகொண்டதால் காவல் துறையினர் பதற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனிடையே, வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எம்.எல்.ஏ மீது தாக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கையில், வரும் அக்.14 அன்று கூட்டுறவு வங்கி கமிட்டி தேர்தல் நடைபெறுகிறது. இந்த விஷயம் குறித்து ஆவதேஷ் - யோகேஷ் வர்மா இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவத்தன்று தாக்குதல் நடந்துள்ளது என்பது உறுதியானது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.எல்.ஏ மீது தாக்குதல் நடத்தப்பட்ட காணொளி
VIDEO | Uttar Pradesh: BJP MLA Yogesh Verma was attacked by Bar Association President Awadhesh Singh outside the main office of Lakhimpur Urban Cooperative Bank in Lakhimpur Kheri.
— Press Trust of India (@PTI_News) October 9, 2024
(Source: Third Party) pic.twitter.com/qcHPMBALf6
இதையும் படிங்க: சரக்கு வாங்க ரூ.100 கொடுக்காததால் ஆத்திரம்; நண்பன் அடித்தே கொலை.!