புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
நீட் பயிற்சி வழங்குவதாக சிறுமி 6 மாத காலம் பலாத்காரம்.. 2 ஆசிரியரிகளின் பதறவைக்கும் செயல்.!
சிறுமியை 2 ஆசிரியர்கள் 6 மாத காலமாக பலாத்காரம் செய்து வந்த நிலையில், அந்த உண்மை அம்பலமாகி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
உத்திரப்பிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த சிறுமி, கடந்த 2022ம் ஆண்டு நீட் தேர்வுக்காக அங்குள்ள பயிற்சி மையம் ஒன்றில் சேர்த்துள்ளார். அங்கு மாணவிக்கு உயிரியல் பாடத்தை சாஹில் சித்திக் (32) என்பவர் கற்றுக்கொடுத்து வந்துள்ளார். அப்போது, அவரை வீட்டில் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது என வீட்டிற்கு அழைத்து, மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமி பலாத்காரம்
இந்த விஷயம் குறித்து வெளியே கூறினால் குடும்பத்தோடு கொலை செய்திடுவேன் என மிரட்டி அனுப்பி வைக்கப்பட்ட காரணத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியும் எதையும் கூறாமல் இருந்துள்ளார். இதனிடையே, சிறுமியின் பயத்தை தனக்கு சாதகமாக்கிய ஆசிரியர், அவ்வப்போது அவரை மிரட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: "ஆவதும் பெண்ணாலே., அழிவதும் பெண்ணாலே".. 14 வயது சிறுமி பலாத்காரம்., பவர் மாத்திரையால் பறிபோன உயிர்.!
இரண்டு ஆசிரியர் கூட்டு
ஒருகட்டத்தில் வேதியியல் ஆசிரியர் விகாஸ் (வயது 39) என்பவரையும் சிறுமியிடம் அத்துமீற அனுமதித்து இருக்கிறார். 6 மாதமாக இந்த துயரம் நடந்துள்ளது. இதனால் அவர் செய்வதறியாது திகைக்க, இறுதியில் இவர்களின் தொல்லை தாங்காமல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் விசாரித்ததில் அதிர்ச்சி உண்மை அம்பலமானது.
காவல்துறையினர் நடவடிக்கை
தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி இளம்பெண்ணாக இருந்தாலும், அவரின் சிறுவயதில் நடந்த இந்த கொடுமை குறித்து போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும், தேர்வு மையம் நடத்திய நிர்வாக குழுவும் விசாரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பச்சிளம் பிஞ்சுடா அது.. 3 வயது சிறுமி பலாத்காரம், கொன்று புதைப்பு.. 22 வயது இளைஞன் வெறிச்செயல்.!