காவல் அதிகாரி கொலை வழக்கில் சிக்கியவருக்கு பாஜக தலைவர் பதவி: மாலை அணிவித்து ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.! உ.பி-யில் அதிர்ச்சி.!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் மாவட்டம் சியானா பகுதியில், கடந்த 2018 ஆம் ஆண்டு பசுவதை தொடர்பான சம்பவம் வன்முறையானது. இந்த வன்முறை சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் அதிகாரி சுபோத் குமார் சிங், அப்பாவி சுமித் குமார் ஆகியோர் பஜ்ரங்தள் உட்பட இந்து ஆதரவு அமைப்பால் கொல்லப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பஜ்ரங் தல் அமைப்பின் நிர்வாகி யோகேஷ் ராஜ் உச்ச நீதிமன்ற உத்தரவின் பெயரில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 41 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களின் 6 பேர் மட்டுமே தற்போது சிறையில் இருக்கின்றனர். 2 பேர் வழக்கு விசாரணையின் போத உயிரிழந்தனர். சிறுவனும் குற்றவாளியாக கைது செய்யப்ப்ட்டு, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எஞ்சியோர் ஜாமினில் வெளியே வந்துவிட்டனர். இவ்வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை செய்யப்படுகிறது.
இந்த 41 குற்றவாளிகளில் ஒருவராக சச்சின் அலஹாவாத் என்பவர் இருக்கிறார். இந்நிலையில், அவருக்கு பாஜக மண்டல தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள பிபிநகர் மண்டல் பகுதியின் பாஜக தலைவராக சச்சின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விஷயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.