ஸ்னாப்சாட் டவுன்லோட் செய்ய தந்தை எதிர்ப்பு; தூக்கில் பிணமாக தொங்கிய 16 வயது சிறுமி.!in Maharashtra Pune 16 Year Old Dies by Suicide 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே, டோம்பிவிலி, நில்ஜே பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வரும் சிறுமிக்கு, பெற்றோர் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளனர். 

சிறுமி தனது பள்ளிக்கு சென்று வந்தபின்னர், தனது ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வந்துள்ளார். ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகள் குறித்து ஓரளவு விழிப்புணர்வு பெற்ற சிறுமியின் தந்தை, அவ்வப்போது மகளின் செல்போனை கண்காணித்து வந்துள்ளார். 

இதையும் படிங்க: ஆன்லைன் முதலீடு இழப்பு; கல்லூரி மனைவி கடிதம் எழுதிவைத்து தற்கொலை.!

ஸ்னாப்சாட் செயலி நீக்கம்

இதனிடையே, ஸ்னாப்சாட் செயலி பயன்படுத்தும் வழக்கத்தை கொண்ட சிறுமி, அதனை பயன்படுத்தி வந்துள்ளார். இதில் விருப்பம் இல்லாத சிறுமியின் தந்தை, ஸ்மார்ட்போனில் இருந்து ஸ்னாப்சாட் செயலியை நீக்கி இருக்கிறார். 

இதனால் ஆத்திரமடைந்த சிறுமி தனது தந்தையிடம் வாதம் செய்துள்ளார். ஆனால், அவர் மகளை கண்டித்து இருக்கிறார். இந்த விஷத்தினால் கடுமையான மனஉளைச்சலை சந்தித்த சிறுமி, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில் மகள் தனது அறையில் இருந்து வெளியே வராததால் பெற்றோர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். 

சிறுமி தற்கொலை

அங்கு சிறுமி தூக்கில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த மண்பாடா காவல் துறையினர், சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் மேற்கூறிய தகவல் அம்பலமானது. 

இதையும் படிங்க: கணவனை துரோகத்தீயில் தள்ளி, மனஉளைச்சலில் தற்கொலை செய்த இளம்பெண்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!