ஆன்லைன் முதலீடு இழப்பு; கல்லூரி மனைவி கடிதம் எழுதிவைத்து தற்கொலை.!Karnataka Kolar college girl Suicide 

 

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், தங்கவயல் பகுதியில் வசித்து வருபவர் பவானி (19). பெங்களூரில் இருக்கும் கல்லூரியில் பிஎஸ்.சி பயின்று வருகிறார். தற்போது கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்தவாறு பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இவர் திடீரென விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள், சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: கணவனை துரோகத்தீயில் தள்ளி, மனஉளைச்சலில் தற்கொலை செய்த இளம்பெண்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!

ஆன்லைன் முதலீடு நஷ்டத்தால் சோகம்

விசாரணையில், மாணவி பணம் சம்பாதிக்க ஆன்லைன் நிறுவனத்தில் ரூ.15 ஆயிரம் முதலீடு செய்திருந்த நிலையில், பணம் முதலீட்டில் நஷ்டம் அடைந்துள்ளது. சகமாணவிகளிடம் கடனாக பெற்று ரூ.10 ஆயிரம் வரை முதலீடு செய்த நிலையில், பணத்தை இழந்த விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

மாணவி கைப்பட எழுதிய கடிதத்தில் அவரின் தற்கொலைக்கான காரணம் அம்பலமான நிலையில், இதுகுறித்து சேஷாத்ரிபுரம் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

 
 

 

 

இதையும் படிங்க: சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்ல மறுத்த பெற்றோர்; விரக்தியில் 10 வயது சிறுமி தற்கொலை.!