சட்டைப்பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததால் பரிதாபம்; ஆசிரியர் பரிதாப பலி.!



in Maharashtra Gondia Teacher Died 

 

உறவினருடன் மார்கெட்டுக்குச் சென்று வந்த ஆசிரியர், செல்போன் வெடித்து 

மராட்டிய மாநிலம், கோண்டியா மாவட்டத்தில் வசித்து வருபவர் சுரேஷ் சங்கர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது உறவினர் நாத் என்பவருடன் சந்தைக்கு சென்று இருந்தார். 

இதையும் படிங்க: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து; 11 பேரின் உயிரை பறித்த சோகம்..!

பின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, சங்கரின் சட்டைப்பையில் இருந்த செல்போன் வெடித்தது. இந்த நிகழ்வில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவருடன் வந்த நாத் படுகாயம் அடைந்தார். 

maharashtra

காவல்துறையினர் விசாரணை

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சங்கரின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விவகாரம் குறித்து போலீசார் தங்களின் விசாரணையை நடத்தி வருகின்றனர். 

உயிரிழந்த சங்கர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் அவர் தனது உறவினருடன் காய்கறி வாங்க கடைக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை சென்றபோது செல்போன் வெடித்து மரணம் அடைந்தார்.

இதையும் படிங்க: பங்குச்சந்தை முதலீடு மோசடி; ரூ.52 இலட்சத்தை பறித்த இளைஞர் கைது.. ஆசை வார்த்தை கூறி பகீர்.!