"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
போக்ஸோ வழக்குகள் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.. வாழ்க்கையை இழக்கும் சிறுமிகள், இளம் தலைமுறை..!
குழந்தைக்கு எதிரான பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றத்தை குறைக்க போக்ஸோ சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது போக்ஸோ வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தை பொறுத்த வரையில் கடந்த 2021 ஆம் வருடத்தின் 11 மாதத்தில் 15 % வழக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளன.
கடந்த 2020 ஆம் வருடத்தில் 2107 போக்ஸோ வழக்குகள் பதிவான நிலையில், 2021 ஆம் வருடத்தில் நவம்பர் மாதம் வரை 2427 வழக்குகள் பதிவாகியுள்ளது. குற்றவாளிககுக்கு தண்டனை வழங்கும் நிகழ்வும் குறைந்துள்ள நிலையில், 2019 ஆம் வருடத்தில் 49 பேர் தண்டிக்கப்பட்ட நிலையில், 2021 ஆம் வருடத்தில் 2 குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2020 ஆம் வருடத்தை பொறுத்த வரையில் 2107 வழக்குகள் என்ற எண்ணிக்கையில் போக்ஸோ வழக்குகள் குறைந்திருந்த நிலையில், 2021 இல் கடந்த 2 வருடங்களில் இல்லாத அளவு போக்ஸோ வழக்குகள் அதிகரித்துள்ளது. மேலும், போக்ஸோ வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்க, சமூக ஊடகம் மற்றும் மொபைல் போன் பயன்பாடு காரணம் எனவும் அரசு வழக்கறிஞர் ஜி.வி. காயத்ரி தெரிவித்து இருக்கிறார்.