தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
"மன்னிச்சிடு மா.. உன்ன கொன்னுட்டேன்., ஓம் சாந்தி" - தாயை கொன்று இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்த மகன்..!
குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியைச் சார்ந்தவர் ஜோதிபென் (வயது 48). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவரின் மகன் நிலேஷ் கோஸை (21). தாய், மகன் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்த மகன், தனது தாயை கொலை செய்திருக்கிறார். பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை ஸ்டேட்டஸாகவும் வைத்துள்ளார்.
ஓம் சாந்தி என ஸ்டேட்டஸ்
அந்த ஸ்டோரியில், "என்னை மன்னித்து விடு அம்மா. நான் உன்னை கொலை செய்து விட்டேன். உங்களை இழந்து விட்டேன். ஓம் சாந்தி" என்று கூறியிருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் நண்பர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காதல் திருமண விவகாரத்தில் மச்சான் கொடூர கொலை; பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பகீர் சம்பவம்.!
மனநலம் பாதிக்கப்பட்ட அன்னை
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஜோதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரின் மகனை கைது செய்தனர். விசாரணையில், முதல் கணவரை பிரிந்து தனது மகனுடன் பல ஆண்டுகளாக வசித்து வந்த ஜோதி, மனநல பாதிப்பு காரணமாக மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
தொடக்கத்தில் மகனை பார்த்துக்கொண்டவர், பின்னாளில் மகனால் பார்த்துக்கொள்ளும் சூழ்நிலைக்கு உள்ளாகி இருக்கிறார். சில நேரம் நிதானமாக அவர் இருந்தாலும், மனபதற்றத்தின் போது யாராலும் கட்டுப்படுத்த இயலாத நபராக இருந்துள்ளார்.
சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற மகன் தாயை கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க: அலைபாயுதே பாணியில் திருமணம்.. விடுதி அறையில் மனைவி கொடூரமாக அடித்தே கொலை.. காரணம் என்ன?.!