11, 12 வயது அக்கா-தங்கை ஓராண்டாக வன்கொடுமை.. பணம் சம்பாதிக்க மாமாவின் அதிர்ச்சி செயல்.!



in Bangalore Orphaned Sister Aged 11 & 12 Sexually Abused and Private Videos Uploaded 

அக்கா-தந்தையான இரண்டு சிறுமிகளை வன்கொடுமை செய்து சமூக வலைத்தளத்தில் வீடியோ பரப்பிய கொடூரம் பதறவைத்துள்ளது.

அக்கா-தங்கை:

Bangalore Rape News: கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், ககளிப்புரா, கடலிப்பலியா பகுதியில் வசித்து வருபவர் கிரண் குமார் நாயக் (வயது 29). இவரின் நண்பர் ஆதித்ய எம்.கே (வயது 20). இவர் சின்னப்பாட்டினாவில் இருக்கும் நீச்சல் குளத்தில் பராமரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். கடலிப்பலியா பகுதியில் 11, 12 வயதுடைய அக்கா-தங்கையான சிறுமிகள் வசித்து வருகிறார்கள். 

இதையும் படிங்க: காதல் கணவனை குடும்பத்துடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி.. அதிர்ச்சிதரும் காரணம்.!

மாமாவின் பராமரிப்பில் இருந்தனர்:

இவர்கள் இருவரின் தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தந்தையும் மனைவி இறந்த சோகத்தில் அதிகம் குடித்தே ஒருகட்டத்தில் உயிரை விட்டுள்ளார். இதனால் பச்சிளம் சிறுமிகள் இருவரும் தனது மாமாவின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனர்.

bangalore

பாலியல் வன்கொடுமை:

இந்நிலையில், சிறுமியின் மாமா ஒருகட்டத்தில் தனது நண்பர்களான கிரண், ஆதித்யா ஆகியோரிடம் பணம் வாங்கிக்கொண்டு சிறுமிகளை அனுப்பி வைத்துள்ளார். சிறுமிகளை தனிமையில் அழைத்துச்செல்லும் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்வதை தொடர்கதையாக்கி இருக்கின்றனர். இந்த கொடுமை கடந்த ஓராண்டாக தொடர்ந்து வந்துள்ளது. 

சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கொடுமை:

மேலும், சிறுமிகளை வன்கொடுமை செய்வதை கயவர்கள் வீடியோ எடுத்தும் சமூக வலைத்தளங்களில் பரப்பி இருக்கின்றனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுமிகளை மீட்டு இருக்கின்றனர். மேலும், குற்றவாளிகள் இருவரை கைது செய்த நிலையில், சிறுமிகளின் மாமாவை தேடி வருகின்றனர். விரைவாக பணம் சம்பாதிக்க சிறுமியை வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து கொடூரர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!