புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
திருமணத்தில் நண்பருக்கு பரிசளித்த கையுடன் மயங்கி விழுந்து மாரடைப்பு மரணம்.. பதறவைக்கும் சோகம்.!
மணமக்களுக்கு பரிசு கொடுத்த சில நொடிகளில் இளைஞர் பரிதாப மரணம் அடைந்தார்.
இன்றளவில் இளம் வயதினருக்கு மாரடைப்பு போன்ற மரணங்கள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் மாரடைப்பு மரணங்கள் என்பது அதிகரித்துள்ளன. ஒருகாலத்தில் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்பட்டு வந்த மாரடைப்பு சார்ந்த மரணம், இன்றளவில் வயது வித்தியாசம் இன்றி தொடருகிறது.
திருமண விழா
இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நண்பரின் திருமண விழாவில் பரிசுப்பொருளை கொடுத்த நண்பர், சில நொடியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டம், கிருஷ்ணகிரி மண்டலம், பெணும்டா கிராமத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றது. நண்பரின் திருமண விழாவில் வம்சி என்ற இளைஞர் கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: திருமண நாள் நடனத்தில் சோகம்.. மாரடைப்பு ஏற்பட்டு மணமகன் பரிதாப பலி., நெஞ்சை உலுக்கும் இறுதி காட்சிகள்.!
மாரடைப்பு மரணம்
இவர் தனது நண்பர்கள் கூட்டத்துடன் மேடையில் இருந்த மணமக்களை வாழ்த்தி, பரிசு கொடுத்த நிலையில், அடுத்த கணமே திடீரென அவர் மயங்கிச் சரிந்தார். உடனடியாக வரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது. வம்சி அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
A joyful occasion turned tragic when a man suffered a fatal heart attack on stage while presenting a wedding gift to his friend.
— The Siasat Daily (@TheSiasatDaily) November 21, 2024
The incident occurred in Penumada village of Krishnagiri mandal of Kurnool district, Andhra Pradesh. The deceased has been identified as Vamsi who… pic.twitter.com/3k3R0QN7Kp
இதையும் படிங்க: பெங்களூர்: பேருந்து ஓட்டுநர் நெஞ்சு வலியால் மரணம்; நடத்துனரின் சாதுர்ய செயலால் தப்பிய உயிர்கள்.. கலங்கவைக்கும் சோகம்.!