இந்தியா

எப்படியாவது கள்ளக்காதலியை பார்த்து விட வேண்டும்..! 25 வயது இளைஞரின் செயலால் நிகழ்ந்த சோகம்..!

Summary:

Illegal relationship 25 years old young man affected by the corona

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் உள்ள செருப்புக்கடை ஒன்றை நடத்தி வருபவர் 25 வயது இளைஞர். இவர் மாதத்திற்கு மூன்று முறை ஆந்திர மாநிலம், சித்துார் கிரிம்பேட்டையில் உள்ள கள்ளக்காதலியை பார்க்க சென்று வருவது வழக்கம். ஆனால் தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக யாரும் வீட்டை விட்டு வெளியே முடியாமல் போய் உள்ளது.

இதனால் அந்த இளைஞனும் தனது காதலியை பார்க்க முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் தனது கள்ளக்காதலியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற எண்ணி நெடுஞ்சாலையில் செல்லும் லாரியில் ஏறி தனது கள்ளக்காதலியை பார்க்க சென்றுள்ளார்.

அப்போது இளைஞர் சென்ற லாரியை சித்தூர் மாவட்ட சுகாதார துறையினர் மடக்கி பிடித்து லாரியில் பயணித்த 20 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்து அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தியுள்ளனர். அதனை அடுத்து வெளியான கொரோனா பரிசோதனை முடிவில் அந்த இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை அடுத்து அந்த இளைஞர் வசித்த பகுதியை முழுவதுமாக தனிமைப்படுத்தி சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர். 


Advertisement