வீட்டிற்குள் தனிமையில் இருந்த கள்ளக்காதல் ஜோடி! வீட்டை பூட்டிய உறவினர்கள்! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கள்ளக்காதல், அதனால் ஏற்படும் கொலைகள், தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் கள்ளக்காதல் ஜோடி ஓன்று அவமானத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரில் ராமாபாய் அம்பேத்கர் பகுதியில் வசித்துவந்தவர் சந்தோஷ்குமார், இவருடைய மனைவி பெயர் அர்ச்சனா. அதேபோல், சித்தராஜு மற்றும் அவரது மனைவி சுமித்ரா இருவரும் மைசூர் நகர் ஜேபி பகுதியில் வைசித்துவந்துள்ளனர்.
இந்நிலையில் சந்தோஷ் குமார் வேலைக்கு சென்றுவரும்போது அவருக்கும் சுமித்ராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்துள்ளனனர். இந்நிலையில் இவர்களது விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரியவர இருவரையும் கூப்பிட்டு அறிவுரை கூறி அனுப்பியுள்ளனனர்.
இருப்பினும் ஆசை தீராத இருவரும் வீட்டை விட்டு ஓட, மறுபடியும் சமாதானம் செய்து இருவரையும் வீட்டிற்கு வரவைத்துள்ளனனர். அப்போதும் திருந்தாத இவர்கள் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனனர்.
இந்நிலையில் சந்தோஷ்குமாரின் மனைவி அர்ச்சனா அவரது தாய் வீட்டிற்கு சென்றதை அறிந்த சுமித்ரா கள்ளக்காதலன் சந்தோஷ் குமார் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் உல்லாசம் அனுபவித்துவிட்டு சுமித்ரா அங்கையே தங்கியுள்ளார். இந்த விஷயம் வெளியே தெரியவர இருவரையும் வீட்டிற்குள் வைத்து உறவினர்கள் வெளியே பூட்டி விட்டனர்.
மேலும், சுமித்ராவின் கணவர் சித்தராஜும் சம்பவ இடத்திற்கு வர அவமானம் தாங்க முடியாத கள்ளக்காதல் ஜோடி வீட்டிற்குள் தூக்கு போட்டு இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றன்னர்.