#வீடியோ: Karma Returns "நல்லது செய்தால் நன்மையே நடக்கும்".. நேரவிருந்த துயரம்.. தப்பிக்கவைத்த கர்மா..!

#வீடியோ: Karma Returns "நல்லது செய்தால் நன்மையே நடக்கும்".. நேரவிருந்த துயரம்.. தப்பிக்கவைத்த கர்மா..!


ifs-officer-susanta-nanda-video-goes-viral-about-karma

சாலையோரத்தில் சண்டையிட்டுக்கொண்டு இருந்த தம்பதியில், பெண்ணின் இரக்க குணத்தால் இருவரின் உயிரும் அதிர்ச்சி தரும் வகையில் தப்பித்தது. 

இந்திய வனத்துறை அதிகாரி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், "பெண்மணியொருவர் தனது காதலருடன் சாலையோரத்தில், மின் கம்பம் அருகில் நின்றபடி சண்டையிட்டுக்கொண்டு இருந்துள்ளார். இருவருக்கும் இடையே பலத்த வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. 

சாலையை கடந்து வந்த ஒரு வயதான மூதாட்டி, கைகளில் வைத்திருந்த பழப் பையை கீழே விட்டுவிட, பையில் இருந்த பழங்கள் அனைத்தும் கீழே சாலையில் விழுந்துவிட்டது. மூதாட்டியை கவனித்த சண்டையிட்டு கொண்டு இருந்த பெண்மணி, அவருக்கு உதவி செய்ய செல்ல முயற்சிக்கிறார். 

அவருடன் இருந்த ஆண் நண்பர் தொடர்ந்து பெண்ணின் கைகளை பிடித்து வாக்குவாதம் செய்யவே, ஒருகட்டத்தில் பெண்மணி ஆணின் கையை விடுத்துவிட்டு வாக்குவாதம் செய்தவாறே, கீழே விழுந்த பழங்களை மூதாட்டியின் பையில் நிரப்பிக்கொண்டு இருந்துள்ளார். மின்கம்பம் அருகே நின்ற ஆண், சில அடிகள் எடுத்து வைத்து பெண்ணிடம் மீண்டும் வாக்குவாதம் செய்கிறார். 

இதன்போது, ஆண் - பெண் நின்றுகொண்டு சண்டையிட்ட இடத்தில், மின் கம்பத்தின் மேலே வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகை கீழே விழுகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆண், சுதாரித்து மூதாட்டியின் நெற்றியில் தன்னுயிரை காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு முத்தமிடுகிறார்". இந்த வீடியோ பதிவு கர்மா என்ற தலைப்புடன் வைரலாகி வருகிறது. 

நன்மை செய்தால் கர்மா நம்மை காப்பாற்றவும் செய்யும், தீமை செய்தால் அதனையே நமக்கும் திரும்பி கொடுக்கும். அனைத்திற்கும் காலம், நேரமும் உண்டு.